18 மாதங்களில் 75000 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு - சட்டசபையில் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 75 ஆயிரம் பணியிடங்களை 18 மாதங்களுக்குள் நிரப்ப முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 25 செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் மொத்தம் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். 

அத்துடன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260 காலிப்பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 6688 பணியிடங்களும், மருத்துவ பணிகள் ஆச்சரிப்பு வாரியத்தின் மூலம் 3041 பணியிடங்களும், ஜனவரி 2026க்குள் நிரப்பப்படும் என்று அறிவித்தார். 

சமூக நலத்துறை , குடிநீர் வழங்கல் வாரியம்,  நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் மற்ற துறைகளில் முக்கிய காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு 5,08,055 வேலைவாய்ப்புகளை தனது தலைமையில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை மு .க. ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

MORE NEWS >>


கருத்துகள்