தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ வைரல்!

தளபதி விஜய் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஜி எஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தி காட் பர்த்டே ஷார்ட்ஸ் என்ற தலைப்பில் அதிரடியான வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் ஹாஸ்டாகை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்.  ரசிகர்கள் என்னதான் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் தளபதி விஜய் அவர்கள் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டாம் என நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  


காரணம் என்னவெனில் கள்ளக்குறிச்சி நிகழ்வை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தவுடன் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.  மேலும் பல தயாரிப்பு நிறுவனங்கள் தனது வாழ்த்து வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். 




More News >>


கருத்துகள்