நாமக்கல் மாவட்டம் கதிராநல்லூர் பஞ்சாயத்தில் தார்சாலை முறைகேடா? விளக்குகிறார் திரு . குமரவேல் வழக்கறிஞர் !
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம் , புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியப்பன் கோவிலிலிருந்து செட்டிக்காடு காலணி வழியாக குள்ளப்பநாய்க்கன்பட்டி வரை கடந்த 2020-2021 ஆம் ஆண்டு சுமார் ரூ.23,00,000 லட்சத்தில் தார்சாலை போடபட்டது.
இந்த புதிய தார்சாலையானது செட்டிக்காடு காலணி அருகில் சுமார் 20 மீட்டருக்கும் மேலாக ஏர்கனவே போடபட்ட பழைய தார்சாலையை அகற்றாமல், புதிய ஜல்லிகற்களை முறையாக போடாமல் மேலோட்டமாக பழைய தார்சாலைமேலெ மெத்தனபோக்காக போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இத்தார்சாலையில் மிக பெரிய முறைகேடு இப்பகுதில் நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்க்கு உடந்தையாய் இருந்த அனைத்து அரசு அலுவலர்களையும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் உரிமைகள் சங்கத்தின் சார்பாகவும், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு ,
த.குமரவேல் MBA(Hr).,D.L.L.A.L.,DCA.,F.AID.,B.A.L.
மாநில இணை ஒருங்கினைப்பாளர்,
மக்கள் உரிமைகள் சங்கம்.
மற்றும்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி,
நாமக்கல் மாவட்டம்.
super
பதிலளிநீக்கு