நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் சாதிவெறி ஆணவக்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சூலை 23 இன்று நாமக்கல் மாவட்டம் தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக தேனி மாவட்ட துணைச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .



படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறை படுத்தக் கோரியும்!
திருநாவுக்கரசு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும்!!
நிவாரணம் 25 லட்சம் வழங்க கோரியும்!! ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது  

தலைமை 
இரா கோபி 
மத்திய மாவட்ட செயலாளர் 

முன்னிலை 
வ.கார்த்தி 
மேற்கு மாவட்ட செயலாளர் ம.அறிவுத்திறன் 
கிழக்கு மாவட்ட செயலாளர் 

கண்டன உரை 
ப.செந்தமிழன் ஊடகப்பிரிவு செயலாளர் 
அறிவழகன்
மேற்கு மண்டல இளம்புலிகள் அணி துணை செயலாளர் 
மற்றும் மாவட்ட தொகுதி நகர ஒன்றிய முகம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்...

கருத்துகள்

கருத்துரையிடுக