ஓபன் பிளஸ் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்து விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவும் உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு நாள்தோறும் 20 லட்சம் டன்கள் உற்பத்தி என்ற நிலையை மீட்டமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நாள்தோறும் நான்கு லட்சம் பாரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தினசரி எண்ணெய் தேவையில் 44 சதவீதமாகும் இந்தியாவிற்கு எண்ணெய் வினியோகிக்கும் முக்கிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் குவைத் ஆகியவற்றின் உற்பத்தி கோட்டாவை அதிகரிக்கவும் கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணெய் உற்பத்தி வினியோகம் அதிகரிக்கும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும். இதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை அதனால் ஏற்படும் பணவீக்கம் இரண்டுமே குறையும்
வெளிநாட்டில் இருந்து இலவசமாக கிடைத்தாலும் இந்தியாவில் என்னை விலையை நம் மத்திய மாநில அரசுகள் குறைக்காது
பதிலளிநீக்கு