பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செயலை எதிர்த்து தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் பா.செல்வராஜ் பதில் அளித்துள்ளார்!

தஞ்சையில் தடையை மீறி உண்ணாவிரதம் 
பாஜகவை கொச்சைப்படுத்தினால் அடிப்படையிலேயே கை வைப்போம் மிரட்டும் அண்ணாமலை 
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து பாஜக சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன் நேற்று பாஜ சார்பில் உண்ணாவிரத போராட் டம் போலீஸ் தடையை மீறி நடந்தது .
 மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து பேசியதாவது : கமல் அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார் . மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மையம் இல்லாமல் பேசி வருகிறார் . அவருடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியே போய் விட்டனர் . இவர் மட்டுமே தற்போது உள்ளார் . கடந்த தேர்தலிலேயே மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் .

 கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர் , எதிர்க்கட்சியினர் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து மேகதாது அணை கட்டுவோம் என்று கூறி வருகிறார்கள் . மேகதாது அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பாஜக எதிர்க்கும் . 

தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம் . மீறி பேசினால் அவர்களின் பிசினஸில் , அடிப்படையில் கையை வைப் போம் . அவர்களுக்கு பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுப்போம் . இவ்வாறு அவர் பேசினார் . பொன்.ராதா கிருஷ்ணன் , சி.பி.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா , நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உட்பட பலர் பங்கேற்றனர் . 
வழக்குபதிவு : போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்பட 700 பேர் மீது " தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .

இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழ் புலிகள் கட்சி மோகனூர் ஒன்றிய செயலாளர் திரு பா. செல்வராஜ் அவர்கள் எதிர்க்கருத்து கூறியதாவது:

பாஜகவை கொச்சைப் படுத்தினால் அவர்கள் தொழில்களில் கை வைப்போம்! - பாஜக அண்ணாமலை.

தலைவர் அண்ணாமலை அவர்களே நாங்கள் உங்களை கொச்சைப்படுத்துகிறோம். 
நாங்கள் மலம் அள்ளுதல், குப்பை பொறுக்குதல், சாக்கடை சுத்தம் செய்தல், பொது கழிப்பிடத்தை கழுவுதல் போன்ற பணிகளை செய்கிறோம்.. முடிந்தால் எங்கள் தொழிலில் கை வையுங்கள் பார்க்கலாம்.. 
  நீங்கள் மேற்கண்ட பணியை செய்ய எப்போது வருகிறீர்கள் என்று பா செல்வராஜ் அவர்கள் கூறினார்.

கருத்துகள்

கருத்துரையிடுக