நாமக்கல் மாவட்டத்தில் மூதாட்டியின் வீடு எரிந்து சேதம்! மூதாட்டிக்கு உதவுமாறு சமூக ஆர்வலர் அரசிடம் கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம்,  கண்ணூர்பட்டி  பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெருஞ்சி காடு கிளையில்  பல  ஆண்டுகளாக பூர்வீகமாக வசித்து வரக்கூடிய  அருந்ததியர் குடியிருப்பில்  
4-1-2022 அன்று  சுமார் மாலை 
3:30 மணி அளவில்  திருமதி வீரம்மாள்  பழனி  மகள் மலர் என்பவருடைய குடியிருப்பானது  எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து  அனைத்து விதமான துணிகள் மற்றும் பாத்திரங்கள் அடிப்படைத் தேவையான அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகின.
  அதோடு அவர் வைத்திருந்த  சுமார் 22 ஆயிரம் காசோலையும் எரிந்து  சேதம்  அடைந்தது.  சேதமடைந்து சுமார் ஒரு மாத காலம்   கடந்த பின்பும்  எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்   மெத்தனமாக கடந்து  செல்லக்கூடிய  அவல நிலையை  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 28-01- 2022 அன்று  மதியம்  சுமார் 02:30 அளவில்   தமிழ் புலிகள் கட்சியின்   நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .
 கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளருக்கு  தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விளக்கமாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக  உதவி செய்திட வேண்டும் என்று தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக  கோரிக்கை வைக்கப்பட்டது . 
புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக முதற்கட்டமாக அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 29 -1 -2022 அன்று காலை சுமார் 8 மணி அளவில்  சுமார்  60 கிலோ அரிசி மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை பொருட்களையும்  தந்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது . 


கருத்துகள்

கருத்துரையிடுக