Lust stories 2: தமன்னா "லஸ்ட் ஸ்டோரிஸ் 2" படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்...!

கடந்த 2018 ஆம் ஆண்டு 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரின் முதல் பாகம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இதன் பிறகு இரண்டாம் பாகம் உருவாகிய அண்மையில் டீசரெல்லாம் வெளியாகி ரசிகர் மத்திகளில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 
இந்த நிலையில் தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டு Netflix தளத்தில் வெளியாகியுள்ளது.  Lust stories இரண்டாம் பாகம் தொடரில் நடிகை தமன்னா, மிருணாள் தாகூர் விஜய் வர்மா, காஜல் இணைந்து நடித்துள்ளனர்.
நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட ஆந்தொலஜி தொடராக லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகம் ஆர் பால்கி, கொங்கோனா சென் ஆகியோர் இயக்கத்தில் வெளியாகி உள்ளது.

இந்தத் தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் series- ஆக இடம் பெற்றுள்ளது.  இதில்  மிருணாள் தாகூர், நீனா குப்தா , அங்கத் பெடி ஆகியோர் நடித்துள்ளனர். 

திருமணத்திற்கு முன்பே ஒரு ஜோடிகளுக்கு இடையே ஏற்பட வேண்டிய காதல், இணக்கம் குறித்து இந்த தொடர் அமைந்துள்ளது.
கொங்கனா சென் சர்மா இயக்கத்தில் "the mirror" இரண்டாம் தொடராக இடம் பெற்றுள்ளது.  இதில் திலோத்தமா சோம், அம்ருதா சுபாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்தத் தொடரில் பெண்ணின் பாலுணர்வு தேவைகள் குறித்து பேசும் தொடராக அமைந்துள்ளது.
இதனையடுத்து மூன்றாவது சீரிஸ் 'sex with ex' தொடரை சுஜய் கோஸ் இயக்கியுள்ளார்.  இதில் தமன்னா, விஜய் வர்மா இணைந்து நடித்துள்ளனர்.  திருமணமான கதாநாயகன் முன்னாள் காதலியை சந்திக்கும் போது, அவள்மீது மோகம் கொண்டு உறவு கொள்வதை போன்ற கதைக்களம் அமைந்துள்ளது. இந்த தொடரில் தமன்னா, விஜய் வர்மா இருவருக்கிடையே நல்ல ரொமான்ஸ் காட்சிகள் அமைந்துள்ளது. 
இதனையடுத்து கடைசி தொடராக அமித ரவீந்தர்நாத் இயக்கியுள்ள 'Tilchatta' சீரிஸ் இல் காஜோல் , குமிட் ஷர்மா நடித்துள்ளனர்.  குடும்பத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசும் தொடராக அமைந்துள்ளது. காஜோலை கொடுமை படுத்தி பலாத்காரம் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு்தியுள்ளது. 

இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 முழு தொடர் முதல் பாகம் அளவிற்கு இல்லையென தோன்றுகிறது. 

கருத்துகள்