"உங்களுக்கு நிகழ்ந்த பேரிழப்புக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்;
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் பிரார்த்தனைகள்;
இன்று வெளியாக இருந்த லியோ போஸ்டரை நாளை வெளியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" லியோ தயாரிப்பு நிறுவனம் X தளத்தில் தெரிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் இதுவும் நல்ல முடிவாக தான் இருக்கிறது என்று இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். நாளை முதல் மீண்டும் லியோ படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஏனென்றால் லியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இடைவிடாமல் அப்டேட்டுகளை அளித்தால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக