நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இளம் பெண் மீரா தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் ஆண்டனி மகள் பெயர் மீரா. இவர் செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 16 ஆகும்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்திகளின்படி,  அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் அவருடைய புதிய படமான ரத்தம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர் சமீபத்தில் சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 19 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் அவரது மகள் மீரா இறந்து கிடந்ததை அடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியை அடைந்தனர். இந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  

More News:

கருத்துகள்